சுவாமிமலை அருகே இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு: சாலை மறியல்

சுவாமிமலை அருகே இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு: சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

சுவாமிமலை அருகே இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் சாலை மறியல் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ட்டது.

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள நாகக்குடி மற்றும் மருத்துவக்குடி கிராமங்களில் வெவ்வேறு சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இரு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக வெவ்வேறு பிரச்சனைகள் காரணமாக மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு தரப்பினரிடையே மோட்டார் சைக்கிளில் மோதியதிலே ஏற்பட்ட தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு சமூகத்தை சிலர் மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் நாகக்குடி பகுதியில் வந்து தகாத வார்த்தைகளை கூறி கூச்சலிட்டுக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதியில் வந்து தகாத வார்த்தைகளால் கூச்சல் விட்டுச் சென்ற மற்றொரு சமூகத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நாகக்குடி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் இருந்த சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கும்பகோணம்- சுவாமிமலை மெயின் சாலைக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அரிந்த கும்பகோணம் துணை போலிஸ் சூப்பிரெண்டு கீர்த்தி வாசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சிவ செந்தில்குமார்,

மலைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story