கோவில் விழாவில் தகராறு - 7 பேர் மீது வழக்குப்பதிவு

கோவில் விழாவில் தகராறு - 7 பேர் மீது வழக்குப்பதிவு

பைல் படம் 

வேப்பனப்பள்ளி அருகே அலேகிருஷ்ணாபுரம் வீரபத்திர சுவாமி கோவில் ஊர் திருவிழாவில் கரகம் எடுப்பதில் தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நேற்று இரவு வீரபத்திர சுவாமி கோவிலில் ஊர் திருவிழா நடந்துள்ளது. அப்போது திருவிழாவில் பூ கரகம் மற்றும் சாமி இரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த மல்லப்பா 39 என்பவரை கிராம மக்கள் கரகம் எடுக்கக் கூடாது என கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மல்லாப்பா காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரிக் வேப்பனப்பள்ளி போலீசார் விசாரனை மேற்கொண்டு அதே கிராமத்தை சேர்ந்த முனியாப்பா 75, வெங்கடேசப்பா 70, மல்லப்பா 42, வீரபத்திரப்பா 36, வீரபத்திரன் 35, சீனிவாசன் 37, நீலகிரியப்பா 50 ஆகிய ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊர் கோவில் திருவிழாவில் கரகம், சாமி தூக்கவதில் தொடர்பாக கிராம மக்கள் மோதிக்கொண்ட இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



Tags

Next Story