மாடு பயிர்களை மேய்ந்ததால் தகராறு

கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, சேங்கல், பூவம்பாடி காலனி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் வயது 42. இவர் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி அரசு மதுபான கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஆண்டியப்பன்.

இவர் வருவாய்த் துறையில் ஓய்வு பெற்ற உதவி அலுவலர். இதே போல கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கீழ முனையனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்காளை என்கிற செல்வராஜ் வயது 56. முத்துக்காளையின் மாடு நவம்பர் 10 ஆம் தேதி அன்று மதியம் மூன்று மணி அளவில் ரவிக்குமாருக்கு சொந்தமான தோட்டத்தில் விளைந்த பயிர்களை மேய்ந்தது.

இது தொடர்பாக எழுந்த பிரச்சனைகள் ஆண்டியப்பனை செல்வராஜ் தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக, ஆண்டியப்பனின் மகன் ரவிக்குமார் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நவம்பர் 13ஆம் தேதி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர். விசாரணையின் முடிவில் முத்துக்காளை என்கிற செல்வராஜ் மீது நவம்பர் 16ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story