கார் வாடகை பணம் கேட்டத்தில் தகராறு: வாலிபர் கைது

கார் வாடகை பணம் கேட்டத்தில் தகராறு: வாலிபர் கைது

கோப்பு படம் 

காவிரிப்பாக்கம் பகுதியில் கார் வாடகை பணம் கேட்ட போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம் (25). இவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். ஓச்சேரி அடுத்த பொய்கைநல்லூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (24). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்தநிலையில் மோகன்ராஜ் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நித்யானந்தனிடம் 10 நாட்கள் வாடகைக்கு கார் வேண்டும் என எடுத்து சென்றுள்ளார். பின்னர் நித்தியானந்தம் கார் வாடகை மற்றும் காரை கேட்பதற்கு பலமுறை மோகன்ராஜை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மோகன்ராஜ் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவியின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நித்தியானந்தம் ஓச்சேரி அருகே மோகன்ராஜை சந்தித்துள்ளார். அப்போது காரையும், வாடகை பணத்தையும் தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மோகன்ராஜ் நித்தியானந்தத்தை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நித்தியானந்தம் அவளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து, மோகன்ராஜை கைது செய்தார். அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story