பணத்தை பங்கிடுவதில் தகராறு : ஒருவர் காயம்

பணத்தை பங்கிடுவதில் கமிட்டியினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு மண்டை உடைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இந்த போட்டியில் திருச்சி,மதுரை திண்டுக்கல், கடலூர், நெல்லை, தென்காசி, உள்ளிட்ட 25 மாவட்டங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்தப் போட்டியானது வெண்புறா கபடி கழகத்தின் சார்பில் கடந்த 38 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் பணம் வசூல் செய்து நடத்தப்பட்டு வந்தது இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்க போட்டி முடிந்தவுடன் வசூலான பணத்தை பங்கிடுவதில் கமிட்டியினரிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கபடி கழக ஒருங்கிணைப்பாளரும் மின்வாரிய ஊழியருமான சிவக்குமாரை தாக்கியதில் மண்டை உடைந்தது. இந்நிலையில் அவரை உடனடியாக மீட்டு திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கபடி போட்டிக்கு வசூலான பணத்தை பங்கு போடுவதில் ஒருவருக்கு மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் கபடி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story