தண்ணீர் பிடிப்பதில் தகராறு - முதியவரை தாக்கிய இளைஞர் கைது

மோளகவுண்டனூரில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதால் முதியவரை தாக்கிய இளைஞர் கைது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதாபி அருகே உள்ள மோள கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி வயது 60 இவரது வீட்டின் அருகாமையில் வசித்து வருபவர் மாரியப்பன் மகன் வினோத் வயது 24. கடந்த ஜனவரி 3ஆம் தேதி காலை 6 மணி அளவில், அப்பகுதியில் ஊராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க மணி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வினோத், மணியை தண்ணீர் பிடிக்கவிடாமல் தடுத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் வினோத் குச்சி எடுத்து மணியை தாக்கி மிரட்டல் விடுத்து உள்ளார். இந்த சம்பவத்தில் மணிக்கு வலது இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மணி அளித்த புகாரின் பேரில் ஜனவரி 4-ம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர். இந்த விசாரணையின் அடிப்படையில் நேற்று ஜனவரி 8-ம்தேதி வினோத்தை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story