மீன்பிடி திருவிழா நடத்துவதில் தகராறு - சாலை மறியல் போராட்டம்
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
குன்றக்குடி அருகே மீன் பிடி திருவிழா நடத்த ஏற்பாடு செய்த கிராம மக்களை ஆபாசமாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே உள்ளது சாலிகிராமம். இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. கண்மாயில் தண்ணீர் வற்றியதால் சாலிகிராமத்து மக்கள் மீன்பிடித் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் கண்மாய் தங்களுக்கு சொந்தமானது, அதில் மீன் பிடிக்கக் கூடாது என தனிநபர்கள் கிராம மக்களை ஆபாச வார்த்தைகள் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குன்றக்குடி கோவில் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். ஆபாச வார்த்தைகள் கூறி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிடாததால்,போலீசார் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story