பால்மடைப்பட்டியில் தொழில் போட்டியால் தகராறு. கடை உரிமையாளரை தாக்கிய நான்கு பேரில் இருவர் கைது. இருவர் தலைமறைவு

பால்மடைப்பட்டியில் தொழில் போட்டியால் தகராறு. கடை உரிமையாளரை தாக்கிய நான்கு பேரில் இருவர் கைது. இருவர் தலைமறைவு.
பால்மடைப்பட்டியில் தொழில் போட்டியால் தகராறு. கடை உரிமையாளரை தாக்கிய நான்கு பேரில் இருவர் கைது. இருவர் தலைமறைவு. கரூர் மாவட்டம் சிந்தாமணி பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்மடை பிரிவு பகுதியில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார், கடவூர் தாலுக்கா, வீரனம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி வயது 55. இவரது கடை அருகே டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரை, கடவூர் தாலுக்கா தேவர்மலை டி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் நடத்தி வருகிறார். இவரது பாரில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சங்கிலி மகன் ரவி, அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சங்கிலி மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் என நான்கு பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் சுப்பிரமணிக்கும் நாகராஜுக்கும் தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டது. சுப்பிரமணி ஹோட்டல் கடை அருகிலேயே ஃபாஸ்ட் ஃபுட் கடையும் நடத்தி வந்ததால் இருவருக்குள்ளும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜூலை 12ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் பார் உரிமையாளர் நாகராஜ் மற்றும் அவரது கடையில் பணியாற்றும் அடையாளம் தெரியாத நபர் ரவி சங்கிலி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சுப்பிரமணியை தகாத வார்த்தை பேசி, பீர் பாட்டில் மற்றும் கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் சுப்பிரமணிக்கு தலை காது இடது கண் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி அளித்த புகார் எண் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவி மற்றும் சங்கிலி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பார் உரிமையாளர் நாகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

Tags

Next Story