நிலப்பிரச்சினையில் தகராறு - 2 பேர் மீது வழக்குப் பதிவு

நிலப்பிரச்சினையில் தகராறு -  2 பேர் மீது வழக்குப் பதிவு

வழக்குப்பதிவு 

கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூரைச் சேர்ந்தவர் கனகராஜ், 43; இவரது தம்பி ராஜ்குமார். இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சந்தோஷ்குமார், ராஜ்குமாருக்கு சாதகமாக கனகராஜை மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலை 9:15 மணிக்கு சாலையில் நடந்து சென்ற கனகராஜை வழிமறித்து சந்தோஷ்குமார், ராஜ்குமார் ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சந்தோஷ்குமார், ராஜ்குமார் ஆகியோர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story