ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தகராறு - அதிகாரிகள் பேச்சு வார்த்தை

ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தகராறு - அதிகாரிகள் பேச்சு வார்த்தை

தர்ணா 

சிவகங்கை அருகே ஆக்கிரமிப்பை அகற்றகோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே தமறாக்கி தெற்கு கிராமம் எருமைக்குளம் வயலில் சர்வே எண் 95/3 கலம் புறம்போக்கு ஆகும். இந்த இடத்தில் தமறாக்கி தெற்கு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதை 2 வருடகாலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் பலமுறை மனு கொடுத்ததன் விளைவாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்று வட்டாட்சியர் தலைமையில் ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றாமல் அங்கிருந்து சென்றனர். இன்று காலை முதல் தமராக்கி தெற்கு கிராம மந்தை முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் துணைத் தாசில்தார் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Tags

Next Story