குடியாத்ததில் பானி பூரி கடைக்காரரிடம் தகராறு: காவலர் பணியிடை நீக்கம்

குடியாத்ததில் பானி பூரி கடைக்காரரிடம் தகராறு: காவலர் பணியிடை நீக்கம்

பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர்

குடியாத்தத்தில் பானி பூரி கடைக்காரரிடம் தகராறு செய்த போலீஸ்காரரை எஸ்பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை புங்கனூர் அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் ராம்பாபு (45). குடியாத்தம் பெரியார் சிலை அருகே சாலை ஓரத்தில் பானி பூரி கடை வைத்துள்ளார்.குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் அருண் கண்மணி (35). இவர் கடந்த 12-ந் தேதி இரவு ராம்பாபுவின் பானி பூரி கடைக்குச் சென்று ராம்பாபுவுடன் தகராறில் ஈடுபட்டு,

அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில், டவுன் சப்- இன்ஸ்பெக்டர் பத்மநாபன், போலீஸ்காரர் அருண் கண்மணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பானி பூரி கடைக்காரர் ராம்பாபுவிடம் தகராறில் ஈடுபட்டு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக போலீஸ்காரர் அருண்கண்மணியை, மாவட்ட எஸ்பி மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story