சிக்னல் ஒயர் கட்டானதால் ரயில் போக்குவரத்தில் இடையூறு

சிக்னல் ஒயர் கட்டானதால் ரயில் போக்குவரத்தில் இடையூறு

 கீழ்வேளூர் - கூத்தூர் இடையே சிக்னல் ஒயர் கட்டானதால், ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், ரயில்வே கேட் அரை மணி நேரம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். 

கீழ்வேளூர் - கூத்தூர் இடையே சிக்னல் ஒயர் கட்டானதால், ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், ரயில்வே கேட் அரை மணி நேரம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தஞ்சையில் இருந்து காரைக்காலுக்கு பாசஞ்சர் டெமு ரயில் கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்கு காலை 8.27 மணிக்கு வந்து சேரும். இன்று காலை இந்த ரயிலுக்காக கீழ்வேளூர் ரயிவே கேட் காலை 8.22 மணிக்கு சாத்தப்பட்டது. இந் நிலையில் கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்கும், கூத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையில் சிகனல் ஒயர் திடீர் என கட்டாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூத்தூரில் இருந்து புறப்பட்ட ரயில் கீழ்வேளுர் கூத்தூர் இடையே நடு வழியில் நின்றது. இதனால் கீழ்வேளூர் ரயில்வே கேட் 30 நிமிடம் திறக்க முடியாமல் போனது.

காலை பள்ளிகள் செல்லும் நேரம் என்பதாலும், வேலைக்கு செல்லும் நேரம் என்பதாலும் ரயில்வே கேட்டின் இரண்டு பக்கமும் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்லுபவர்கள் என 300க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள், 8 அரசு பேருந்துகள், 6 பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் ஆட்டோ, கார் என் ஏராளமான வாகனங்களில் வந்தவர்கள் கடுமையான காலை வெளியில் அவதிப்பட்டதோடு பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் பொதுமக்கள் சிலர் சுமார் 30 நிமிடம் கேட் போடப்பட்டுள்ளதால் பள்ளிக்கும் வேலைக்கும் செல்ல முடியாமல் அவதி படுகிறோம் என்று ரயில் நிலைய அதிகாரியிடம் என்று கூறி ரயில் வர தாமதம் ஆகும் என்பதால் உடன் மேலிடத்தில் பேசி கேட்டை திறக்க வைக்கப்பட்டுள்ள அவசர கால சாவியை எடுத்து திறந்து விட வேண்டும் என்று கோரினர்.

இதையடுத்து ரயில் நிலைய அதிகாரி அவசர கால சாவியை எடுத்து கேட்டை திறந்து விட்டார். இதனால் பொதுமக்கள் சுமார் 30 நிமிடம் அவதிப்பட்டனர்.

Tags

Next Story