போச்சம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொலை செய்த மனைவி

போச்சம்பள்ளி அருகே கள்ளக்காதலுக்கு  இடையூறு: கணவனை கொலை செய்த மனைவி

கொலை செய்யப்பட்ட கணவன்

போச்சம்பள்ளி அடுத்த கூரம்பட்டி கிராமத்தில் பழைய காதலைத் தொடர இடையூறாக இருந்த கணவனை காலி செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள கூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சு.

ஓசூர் அடுத்த பேரிகை பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற நபருடன் காதல் ஏற்பட்டு பழகி வந்தது சுஜாதாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது சுஜாதாவின் பெற்றோர் ராம்குமாருக்கு பேசி திருமணம் செய்து வைத்தனர்.

சுஜாதாவும் சுமுகமான முறையில் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது இந்நிலையில் கணவனுடன் கோபித்துக் கொண்டு சுஜாதா கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவரது காதலனுடன் சென்ற நிலையில்,

மனைவி காணவில்லை என ராம்குமார் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜாதாவை கண்டுபிடித்து ராம்குமார் இடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக கணவன் மனைவி இருவரும் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது

இந்நிலையில் இரவு சுஜாதா கணவன் ராம்குமாருக்கு உணவு பரிமாறி விட்டு வீட்டில் தூங்க சென்றுள்ளார். வீட்டின் வெளியே ராம்குமாரின் தந்தை முருகேசன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டின் உள் ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

கணவன் மனைவிக்குள் ஏதோ வாய் தகராறு என்று எண்ணிய முருகேசன் மீண்டும் படுத்து தூங்கியுள்ளார் காலை வீட்டை விட்டு வெளியே வந்த சுஜாதாவின் கணவரின் உடலில் ரத்தம் வெளியே இருக்கிறது என்ன ஆச்சு என்று தெரியவில்லை என்று அழுதவாறு மனைவி சுஜாதா வெளியே ஓடிவந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் ராம்குமார் ரத்த வெள்ளத்தில் கழுத்து கயிறு இருக்கப்பட்டு தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த நாகரசம்பட்டி போலீசார் மற்றும் பர்கூர் டிஎஸ்பி பிரித்திவிராஜ் சவுகான் பாரூர் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் உதவி ஆய்வாளர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இறந்த ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ராம்குமார் ன் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர் .

காவல்துறையினர் கொலை சம்பந்தமாக சுஜாதாவிடம் விசாரணை மேற்கொண்டதில் ஓசூர் அடுத்த பேரிகை பகுதியை சேர்ந்த கணேசன் என்ற இளைஞர் உடன் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்ததும்,

இவர்கள் காதலை ஏற்காத சுஜாதாவின் பெற்றோர் ராம்குமாருக்கு திருமணம் செய்து வைத்ததும் தெரிய வந்தது கணவருடன் வாழப் பிடிக்காத சுஜாதா காதலனை வர வைத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவரை காதலன் கணேஷ் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரும் இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர்,

வீட்டின் வெளியே படுத்து இருந்த ராம்குமாரின் தந்தை முருகேசன் மீது போர்வையை போற்றி மூடிவிட்டு நைசாக வீட்டில் வந்தனர் காதலன் வருகைக்காக காத்திருந்த சுஜாதா கதவை திறந்து விட்டு வரவழைத்து தாலி இட்டுள்ளார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவர் ராம்குமார் முகத்தில் தலையணை வைத்து கழுத்தில் பாவாடையின் நாடாவை கழுத்தில் போட்டு இருக்கியதாக தெரிகிறது ராம்குமார் சத்தம் போடவே அருகில் இருந்த கடப்பாரை கொண்டு ராம்குமார் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலமாக தாக்கி உள்ளனர்.

காயம் அடைந்த ராம்குமார் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் நிகழ்வு விசாரணையில் தெரிய வந்த நிலையில் பின்னர் மூவரையும் நாகரசம்பட்டி போலீசார் கைது செய்து போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதலனுடன் சேர்த்து வைக்க கோரி கோரிக்கை வைத்த மனைவியின் கோரிக்கை நிராகரித்த கணவனை காதலன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்த்து தீர்த்து கட்டிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story