சாலை பணிக்கு இடையூறு - தண்ணீர் லாரிகளை எதிர்த்து போராட்டம்

சாலை பணிக்கு இடையூறு - தண்ணீர் லாரிகளை எதிர்த்து போராட்டம்
தண்ணீர் லாரிகளை எதிர்த்து போராட்டம்
மேடவாக்கம் ஊராட்சி முதல் வார்டுக்கு உட்பட்ட வடக்குபட்டு பிரதான சாலை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல், படுமோசமாக இருந்தது. இப்பகுதி மக்களின் பல கட்ட போராட்டத்திற்குப் பின், முதல்வர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த வழியாகத் தனியார் தண்ணீர் லாரிகள் அடிக்கடி சென்று வருவதால், சாலை பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் லாரிகளை இந்தத் தடத்தில் அனுமதிக்கக் கூடாது என, அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணை போலீசார், பேச்சு வார்த்தை நடத்தியதும் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story