உறவினருடன் தகராறு - வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
உறவினருடன் தகராறு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
செய்யாறு அருகே உறவினருடன் ஏற்பட்ட தகராறில் வேதனை அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு அடுத்த மகா ஜனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி(22). மாங்கால் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதி இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உறவினர் தூசி போலீசில் புகார் செய்ததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கிருஷ்ண மூர்த்தி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தியின் சடலத்தை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தந்தை குமார் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story