தாவரவியல் பூங்கா போட்டிக்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம்!
மலர்க் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறந்த பூங்காக்களுக்கு, பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மலர்க் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறந்த பூங்காக்களுக்கு, பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பூங்கா போட்டிக்கான விண்ணப்ப படிவங்கள் அரசு தாவரவியல் பூங்கா அலுவலகத்தில் உள்ள ஊட்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பூங்காக்களின் உரிமையாளர்கள் போட்டிக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் 24ம் தேதி வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 27ம் தேதிக்குள் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு ஒன்றுக்கு ரூ.1007 வீதம் கட்டணத்துடன் செலுத்த வேண்டும். சிறந்த பூங்காக்களுக்கான தேர்வு செய்யும் குழு 29ம் தேதி முதல் மே மாதம் 5ம் வரை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மலர்க்காட்சி அன்று நடத்தப்படும் பல்வேறு போட்டிகளுக்கு மே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை போட்டியாளர்கள் ஒரு பதிவிற்கு ரூ.507 வீதம் செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை 0423-2442545 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி அறிவித்துள்ளார்.