குருதி கொடையாளர்கள் 25 பேருக்கு விருதுகள் வழங்கல்!
குருதி கொடையாளருக்கு விருது வழங்கல்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிட்டி ரோட்டரி சங்கம், ஆத்மா ரத்த வங்கி ஆகியவற்றின் சார்பில் 25 குருதிக் கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் பி. அசோகன் தலைமை வகித்தார்.
நகர்மன்ற உறுப்பினர் ஜெ. ராஜா முஹம்மது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஜி.ஏ. ராஜ் மோகன், இருக்கை மருத்துவர் J.இந்திராணி மருத்துவ கண்காணிப்பாளர் வி. தையல்நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர். மணி, புதுக்கோட்டை மாவட்டத்தின் குருதிக் கொடையாளர்கள் 25 பேருக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார். முன்னதாக, கண. மோகன்ராஜா வரவேற்றார். முடிவில், டாக்டர் சரவணன் நன்றி கூறினார்.