ஒசூர் அருகே தேமுதிக சார்பில் 500 பேருக்கு பிரியாணி வழங்கல்
பிரியாணி வழங்கிய தேமுதிகவினர்
ஒசூர் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11வது நாள் நினைவு தினத்தையொட்டி, தேமுதிக சார்பில் 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். விஜயகாந்த் மறைவு ரசிகர்கள் மற்றும் சினிமா திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் தேமுதிக மற்றும் ரசிகர்கள் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 11ம் நாள் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். இந்தநிலையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் அடுத்த சப்படி என்னும் கிராமத்தில் தேமுதிக சூளகிரி ஒன்றிய செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் கேப்டன் விஜயகாந்த் படத்திற்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் விஜயகாந்த் நினைவாக 500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர்.
Next Story