மதுரை மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகம் வழங்கல்

மதுரை மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு  புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மதுரை மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளை வழங்கிட ஏதுவாக அந்தந்த பள்ளிகளிலேயே வருவாய்த்துறையின் மூலம் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மாணவ, மாணவியர்களுக்கு பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கி, அஞ்சல் வங்கி சேவை, ஆதார் பதிவு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தொடங்கி வைத்தார்.

மதுரை ஊமச்சிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று (10.06.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாணவ, மாணவியர்களுக்கு பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கி, அஞ்சல் வங்கி சேவை, ஆதார் பதிவு முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்ததாவது,

மிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்கள் நலனுக்காக பள்ளிக்கல்வித் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் கல்வியை ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவித்திடும் புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

மாணவ, மாணவியர்கள் அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மாணவ, மாணவியர்கள் சிரமமின்றி கல்விக் கடனுதவி பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கில் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ, மாணவியர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கிடவும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இச்சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 2,161 அரசுப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் அனைத்திலும்,

இவ்வாண்டு முழுவதிலும் இத்தகைய சிறப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதேபோல மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளை வழங்கிட ஏதுவாக அந்தந்த பள்ளிகளிலேயே வருவாய்த்துறையின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story