கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிறைக்கு புத்தகங்கள் வழங்கல்

கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிறைக்கு புத்தகங்கள்  வழங்கல்

புத்தகங்கள் வழங்கல்

கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் கிளை சிறைக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கும்பகோணத்தில் கிளை சிறையில் 70-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். சிறை வாழ்க்கையை பயனுள்ள விதத்தில் மேம்படுத்தும் விதமாகவும்,

அவர்களின் எண்ண ஓட்டத்தை சீர்படுத்தும் விதமாகவும் கைதிகளை புத்தகம் வாசிப்பதன் மூலம் நல்வழிப்படுத்தும் வகையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சங்க தலைவர் விவேகானந்தன்,

தலைமையில் கிளை சிறையில் உள்ள கிளை சிறை கண்காணிப்பாளர் பாலாஜியிடம், மனிதன் எப்படி வாழ வேண்டும், மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய நூல்கள், சிறுகதை மற்றும் கவிதையை தொகுப்புகள் அடங்கிய நாவல்கள், விவசாயம் பற்றிய நூல்கள், பெரியார்,

அண்ணா, அம்பேத்கர் எழுதிய நூல்கள் மனிதர்களை பக்குவப்படுத்துக்கூடிய நூல்கள் ரூபாய் 15,000 மதிப்புள்ள நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ரஜினி, தொழிற்சங்க தலைவர் ஆரோக்கியராஜ், மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நூல்கள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்கள்.

Tags

Next Story