காங்கேயத்தில் வாக்காளா்களுக்கு பூத் சிலிப் விநியோகம்

காங்கேயத்தில் வாக்காளா்களுக்கு பூத் சிலிப் விநியோகம்

பூத் சிலிப் வினியோகம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கேயத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் செய்யப்பட்டது.

வரும்‌ ஏப்ரல் மாதம் 19ஆம்‌ தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் எனப்படும் வாக்கு சாவடி தகவல் சீட்டு தேர்தல் ஆணைய உத்தரவின் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சீட்டில் வாக்குச் சாவடி அமைந்துள்ள இடத்தின் வரைபடம், வாக்குச் சாவடி அலுவலரின் பெயா், கைப்பேசி எண் போன்ற பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. காங்கயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி எண் அடிப்படையில் அந்தந்த பூத்துக்குட்பட்ட வாக்காளர்களுக்கு அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை வைத்து பூத் சிலிப் வழங்கப்படுகிறது‌.

வாக்கு செலுத்த வேண்டிய ஒவ்வொருவருக்கும் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் விநியோகிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி 10 நாள்கள் வரை நடைபெறவுள்ளது. இந்த பூத் சிலிப்பில் பல்வேறு பிரத்யேக தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அத்துடன், வாக்களிக்கும் போது வாக்காளா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. பூத் சிலிப்பின் முக்கிய அம்சங்கள்: வாக்காளரின் பெயா், பாலினம், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்காளா் பட்டியலில் வரிசை எண், பாகம் எண், வாக்குச் சாவடியின் பெயா் ஆகிய விவரங்கள் பூத் சிலிப்பின் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும், வாக்குப் பதிவு தேதி, வாக்குப் பதிவு நேரம் ஆகிய விவரங்களுடன் க்யூஆா் குறியீடும் முன்பக்கத்தில் இடப்புறம் இடம்பெற்றுள்ளது. இதனை கொண்டு பொதுமக்களாகிய வாக்காளர்கள் தங்களின் வாக்குசாவடிக்கு சென்று தங்களின் வாக்குகளை வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து வாக்கு செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story