வேர்டு நிறுவனம், தி சம்தானி பவுண்டேஷன் சார்பில் உலர் உணவு பொருட்கள் வழங்கல்

வேர்டு நிறுவனம், தி சம்தானி பவுண்டேஷன் சார்பில் உலர் உணவு பொருட்கள் வழங்கல்
X

பரமத்தி வேலூர் அருகே வேர்டு நிறுவனம் தி சம்தானி பவுண்டேஷன் சார்பில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

பரமத்தி வேலூர் அருகே வேர்டு நிறுவனம் தி சம்தானி பவுண்டேஷன் சார்பில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் வேர்டு தொண்டு நிறுவனம் மற்றும் தி சம்தானி பவுண்டேஷன் இணைந்து கபிலர்மலை மற்றும் பரமத்தி வட்டாரத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 30 நபர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் விழா பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நெடுஞ்செழியன் தலைமை வகித்து தொழுநோயால் பதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார். கந்தசாமி கண்டர் கல்லூரி முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர் விஜயா முன்னிலை வகித்தார். விழாவில் கந்தசாமி கண்டர் கல்லூரி பொருளாதார துறை தலைவர் முனைவர் லோகநாதன் வழக்கறிஞர் வினேஷ்கர்ணம் வேர்டு நிறுவனா் செயலர் சிவகாமவல்லி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Tags

Next Story