மாற்றுத்திறனாளிகளுக்கு 12- D படிவம் விநியோகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு 12- D படிவம் விநியோகம்

தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து தபால் வாக்கு செலுத்துவதற்கான 12-D படிவத்தை விநியோகம் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஓம் சக்தி நகரில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளி வாக்களிக்க ஏதுவாக அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று 12-D படிவம் விநியோகம் செய்யப்பட்டது. 12-D படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினார்.

Tags

Next Story