விலையில்லா சைக்கிள்கள் விநியோகம்

விலையில்லா சைக்கிள்கள் விநியோகம்

பள்ளிக்கல்வி துறையின் சார்பில் தக்கலையில் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான விலையில்லா சைக்கிள்களை, அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி, துவக்கி வைத்தார்.

தக்கலையில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடப்பாண்டுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று தக்கலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி பேசுகையில்:- கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 140 பள்ளிகளில் பயிலும் 7132 மாணவர்களுக்கும், 7988 மாணவிகளுக்கும் என மொத்தம் 15120 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இன்று மிதிவண்டிகள் பெற்ற மாணவ மாணவியர்கள் இவற்றை நல்ல முறையில் பாரம்மரித்து உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

கிஆட்ய௬ஸ் தொடர்ந்து இந்திய அளவில் நடைபெற்ற இளம் எழுத்தாளர்கள் இடையே நடைபெற்ற போட்டியில் தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு பயிலும் மாணவி அர்ஷியா பெனாசிர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றதோடு, போட்டி நடத்திய அமைப்பு ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாணவிக்கு வழங்கி கௌரவித்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story