மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், பரிசுகள் வழங்கல்
புத்தாண்டு கொண்டாட்டம்
ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், பரிசுகள் வழங்கி புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொடக்கப் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், பரிசுகள் வழங்கி புத்தாண்டு கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் பங்க் ராஜீ, ராஜவேல், அன்விதா ராஜ், அத்விக ராஜ், உதவி தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் புத்தாடைகள், பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்கள். அலினா சில்க்ஸ் பாபு அப்துல் சையத் நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைவருக்கும் காலண்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க பொறுப்பாளர்கள் செந்தில்குமார், புகழேந்தி, கலையரசன், தங்கவேல், மூர்த்தி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்கே ஹோட்டல் ராஜா அனைவரையும் வரவேற்றார். இறுதியாக அங்கன்வாடி ஆசிரியை தவுலத் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.
Next Story