பள்ளி மாணவர்களுக்கு நோட்புக் வழங்கல்!
எஸ்ஐ ராஜாமணி
மாப்பிள்ளையூரணியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை எஸ்ஐ ராஜாமணி வழங்கினார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாய் தந்தையர்களை இழந்து பள்ளி படிப்பை மேற்கொள்ளும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையத்தில் நடைபெற்றது. சமூகஆர்வலர் தொம்மை அந்தோணி தலைமை வகித்தாா். தாளமுத்துநகர் காவல்நிலைய எஸ்ஐ ராஜாமணி 42 மாணவ மாணவிகளுக்கு பள்ளி பேக், நோட்புக், பேனா உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி அறிவுரை வழங்கி பேசுகையில் இந்த பள்ளி பருவம் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடமாக அமைகிறது. இதை கருத்தில் கொண்டு மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் அதனடிப்படையில் ஆசிாியா்கள் சொல்படி நடந்து படிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்திலேயே எதிர்காலத்தில் எந்த இடத்தை அடைய வேண்டும் என்பதையும் தேர்வு செய்து நல்ல பழக்க வழக்கங்களை கற்று வளரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விழாவில் தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜேசுராஜா, தனிப்பிாிவு ஏட்டு முருேகசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story