திருப்பத்தூரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனா வழங்கல்

திருப்பத்தூரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு  பேனா வழங்கல்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூரில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு பேனா மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூரில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு பேனா மற்றும் இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்திய நகர மன்ற தலைவர் தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு பேனா மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு எழுதும் மையத்திற்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளுக்கு, பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் அரசு பள்ளிக்கு நற்பெயர் எடுத்து தர வேண்டும் என நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் கூறினார்.

பின்னர் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கும் பேனா,நோட்டு மற்றும் இனிப்புகளை வழங்கினர். உடன் மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேஷ் ,நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு,மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story