காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து 95,716பேருக்கு வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து 95,716பேருக்கு வழங்கல்

சொட்டு மருந்து வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 95,716 பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு, சுகாதார நலத்துறை இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், 95,716 பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் என, 731 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. இதை தவிர நடமாடும் குழுக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்,

முகாம் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் பேருந்து நிலையத்தில், போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் சிறு, குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தனர். தமிழக காங்.,

தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை உட்பட பலர் பங்கேற்றனர். , மாலை, 5:45 மணி நிலவரப்படி, 95,716 பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது."

Tags

Next Story