தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
பொங்கல் பரிசு வழங்கல்
கடலூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும் சுமார் 500 ற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் தூய்மை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசாக புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மற்றும் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆண்களுக்கு வேஷ்டி, சட்டை மற்றும் பெண்களுக்கு பட்டுப்புடவை அடங்கிய பரிசுகளை வழங்கினர்.
Next Story