பள்ளிபாளையம் காவல்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்
பள்ளிபாளையம் காவல் நிலையம் சார்பில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், ஏராளமான பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ள நிலையில், பொருளாதார ரீதியான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் தன்னார்வல்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் பொதுநல அமைப்புகளின் சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு,வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் காவல் நிலையம் சார்பில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், லுங்கி, சோப்பு ,ஷாம்பு, பால் பவுடர், சானிடரி நாப்கின், பிஸ்கட், மெழுகுவர்த்தி, உள்ளிட்ட 16 வகையான நிவாரண பொருட்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார், உதவி காவல் ஆய்வாளர்கள் பிரபாகரன், சேகர் ஆகியோர் முன்னிலையில் நிவாரண பொருட்கள் வாகனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.அனுப்பி வைக்கபடும் நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் ....