மானாவாரி சாகுபடிக்கு மானியத்தில் விதைகள், உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம்

மானாவாரி சாகுபடிக்கு மானியத்தில் விதைகள், உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம்

வேளாண் விரிவாக்க மையம் 

மானாவாரி சாகுபடிக்கு, மானியத்தில் விதைகள், உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம், தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது,தர்மபுரி வட்டார பகுதிகளில், பரவலாக கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, கோடை உழவு பணி யினை மேற்கொள்ள வேண்டும். கோடை உழவு நிலத்தின் சரிவு குறுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்வதால், மழை நீரானது வழிந்து ஓடுவது தடுக்கப்பட்டு நிலத்தில் ஊடுருவி சென்று, நிலத் தடி நீர்மட்டம் உயர்வதற்கு வழிவகை செய்யும்.

மேலும், நிலத்தில் உள்ள பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் வெளிக் கொண்டு வரப்பட்டு, பறவைகளாலும், சூரிய வெப்பத்தாலும் அழிக்கப்படுகின்றன. மேலும், பயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும், பாக்டீரியா மற்றும் பூஞ்சான கிருமிகள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்கப்படுகின்றன.

தர்மபுரியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிருஷ்ணா புரத்தில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில், மானாவாரி சாகுபடிக்கு உகந்த நிலக்கடலை விதைகள், உளுந்து விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் விதை நேர்த்தி மருந்துகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தர்மபுரி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story