தேர்தலில் பணியாற்றிய நகரமன்ற உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கல்

தேர்தலில் பணியாற்றிய நகரமன்ற உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கல்
இனிப்புகள் வழங்கல் 
கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய நகர மன்ற உறுப்பினர்களுக்கு பரிதா நவாப் இனிப்பு வழங்கினார்.

கிருஷ்ணகிரி நகர மன்றத்தின் கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்து உடன் துவங்கியது. கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 /40 வெற்றி பெற்றதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றிய நகர மன்ற உறுப்பினர்களைப் பாராட்டி கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் பரிதா நவாப் பாராட்டி இனிப்புகளை வழங்கினார்.

Tags

Next Story