திருப்பூரில் மக்கள் நீதி மையம் சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கல்

திருப்பூரில் மக்கள் நீதி மையம் சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கல்

உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்பூர் தெற்கு மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பாக கலைஞர் மத்திய பஸ் நிலையம் எதிரே பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது
திருப்பூர் தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக திருப்பூர் கலைஞர் மத்திய பஸ் நிலையம் எதிரே கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவை நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாநில மகளிர் அணி செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செ.மகேந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் கமல் ஜீவா முன்னிலை வகித்தார். இதில் மகளிர் அணி நிர்வாகி தாமரைச்செல்வி, சாந்தி, பரந்தாமன், கோபிநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story