குமரி மாவட்ட அளவிலான பொங்கல் மாட்டு வண்டி போட்டி
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் இலந்தை இளைஞர் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று மாலை மாவட்ட அளவிலான மாட்டுவண்டி போட்டி நடந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து 31 பெரிய தட்டு வண்டியும், 17 சிறிய தட்டு வண்டியும், 14 வில் தட்டு வண்டிகளும் பங்கேற்றன. வில்வண்டி போட்டியை தளவாய் சுந்தரம் எம் எல் ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரிய தட்டு வண்டி போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தொடங்கி செண்பகராமன் புதூர் வரை நடந்தது. நிகழ்ச்சிக்கு செண்பகராமன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். இளைஞர் இயக்க தலைவர் மதன் மற்றும் செயலாளர் சீனிவாசன், செண்பகராமன் புதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.