மாவட்ட குத்துச்சண்டை போட்டி - அல்போன்சா கல்லூரி சாம்பியன்.

X
கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை அமைச்சூர் கழகம் சார்பில், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர். 51-54 எடை பிரிவில் மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவர் அஸ்வின், முதலாமாண்டு வணிகவியல்துறை மாணவி ஜினோ ரேஷ்மி, 66- 70 எடை பிரிவில் மூன்றாமாண்டு வணிகவியல்துறை மாணவி ஆங்னஸ் ப்ரீத்தி ஆகியோர் தங்கப் பதக்கத்தைப் பெற்றனர். 54-57 எடை பிரிவில் மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி சிந்து, 71-75 எடைப்பிரிவில் மூன்றாம் ஆண்டு வணிகவியல்துறை மாணவர் நிஷாந்த், 80-86 எடை பிரிவில் இரண்டாமாண்டு வணிகவியல்துறை மாணவர் ஜோயல் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றனர். 60-63 எடை பிரிவில் முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவர் அருண் ஜெயக்குமார் ,48- 50 எடை பிரிவில் முதலாமாண்டு வணிகவியல்துறை மாணவி ஜினோஸ்பின் ஆகியோர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளையும், யிற்சியாளர் ஜஸ்டின் ராஜ், உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஏ பி சீலன் , உதவி உடற்கல்வி இயக்குனர் பி அனிஷா ஆகியோர்களைக் கல்லூரி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
Tags
Next Story
