நீடாமங்கலத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூபாய் 70. 79 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும் பூவனூர் ஊராட்சியில் ரூபாய் 5.80 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் பூவனூர் ஊராட்சி முதல் பெரம்பூர் ஊராட்சி வரை கோரையாற்றின் குறுக்கே புது பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டு வருவதையும் பெரம்பூர் ஊராட்சியில் ரூபாய் 68.30 லட்சம் மதிப்பீட்டில் முல்லை வாசல் கிராமம் முதல் பெரம்பூர் வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story