அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

X
பள்ளிபாளையத்தில் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
பள்ளிபாளையத்தில் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள வந்த மருத்துவர் உமா பள்ளிபாளையம் நகராட்சி, ஆவராங்காடு தொடக்கபள்ளியில் முதலமைச்சரின் விரிவான காலை உணவு திட்ட மையத்தினை ஆய்வு மேற்கொண்டு, முதலமைச்சரின் விரிவான காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை விரிவாகக் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஆவராங்காடு அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். நிகழ்வின்போது அரசுத்துறை, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Tags
Next Story
