அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
ஆலோசனை கூட்டம்
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி குமரி நாடாளுமன்ற பொதுத்தேர் தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நடத்துவது குறித்த கலந்தாலோசனை கூட்டம் விளவங்கோடு தாலுகா அலு வலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், தேர்தல் அலுவ லர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கூறியதாவது.கன்னியாகுமரி நாடாளு மன்ற பொதுத்தேர்தல் மற் றும் விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
அதற்கான வேட்பும னுதாக்கல் இன்று (புதன்கி ழமை) தொடங்குகிறது. வருகிற 27-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற உள் ளது. வேட்புமனு தாக்கலுக் கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் மற்றும்அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதி முறைகள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த விதிமுறைகளின் படி நடைபெற உள்ளது. மேலும் விள வங்கோடு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,17,694 பேரும், பெண் வாக் காளர்கள் 1,19,685 பேரும், மூன்றாம் பாலின வாக்களாளர்கள் 3 பேரும் என மொத் தம் 2,37,382 வாக்காளர்கள் உள்ளனர்.இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.