கோமாரி தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கோமாரி தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.


விழுப்புரம் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் வழுதரெட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் சி.பழனி தொடங்கி வைத்து பேசியதாவது: விழுப்புரம் கோட்டத்தில் 2,35,000 கால்நடைகள், திண்டிவனம் கோட்டத்தில் 2,43,500 கால்நடைகள் என மொத்தம் 4,78,500 கால்நடைகளுக்கு ஜூன் 10 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை 30 நாள்கள் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. கால்நடை பராமரிப்புத் துறையிலுள்ள 97 தடுப்பூசி செலுத்தும் குழுக்கள் மூலம் தேசியகால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, இந்த முகாமில் கால்நடைகளை வளா்ப்போா்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தடுப்பூசித் திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கி கட்டாயம் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சினையுற்ற கால்நடைகள், பால் கறக்கும் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்றாா்.நிகழ்ச்சியில், கால்நடை பராமரித்துறை மண்டல இணை இயக்குநா் லதா, உதவி இயக்குநா் மோகன், கால்நடை மருத்துவா் சேகா், உதவி மருத்துவா்கள் சிவக்குமாா், பாலாஜி மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story