முன்னேற்பாடு பணி குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்

முன்னேற்பாடு பணி குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர்


நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடு பணிகள் அனைத்து பகுதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடு பணிகள் அனைத்து பகுதிகளும் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மூன்று சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு துணை ஆட்சியர் மற்றும் உதவி இயக்குனர் அந்தஸ்த்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய், காவல்துறை என அனைத்து துறைகளும் இணைந்து, சாலை பராமரிப்பிற்கான நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு துறை இவைகளோடு இணைந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எந்த பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை சரி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எல்லா பள்ளிகளும் பாதுகாப்பு மையங்களாக பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டாரத்திற்கு சுமார் 200 மணல் மூட்டைகள் வீதம் மாவட்டம் முழுவதும் 2000 மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கம்புகள் ஆகியவை தயார் படுத்தப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ஆழமான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பு முகாம்களும் மருந்து தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது மேலும் சிறு சிறு ஓடைகள், நீர் பாதைகள், பாலங்கள் ஆகியவற்றில் அடைப்புகள் ஏற்படாமல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டுறைகள் செயல்பட்டு வருகிறது. அதிகமாக மழை பெய்யும் இடமான மாஞ்சோலை ஊத்து ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு அங்குள்ள நிலைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது

மேலும் நமது மாவட்டத்தில் ஏற்கனவே தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர் கடந்த ஆண்டுகளில் மழை நேரங்களில் பாதிக்கப்பட்ட இடங்களும் கண்காணிக்கப்படுகிறது அதோடு மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களும் பேரிடரை எதிர்கொள்வது அளவில் 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர் மேலும் தீயணைப்பு துறையின் மூலமும் பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags

Next Story