வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல் !!

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல் !!

ச.உமா,

நாமக்கல் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ச.உமா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இராஜேஷ் கண்ணன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

நாமக்கல் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ச.உமா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இராஜேஷ் கண்ணன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

அப்பொழுது கூறிய மாவட்ட ஆட்சியர் ச.உமா நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியை பொருத்தவரை வாக்கு எண்ணிக்கை விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காவல், வருவாய் உள்ளிட்ட அரசு துறைகள் ஒருங்கிணைப்புடன் சிறப்பான முறையில், வாக்கு எண்ணும் மையம் தீவிரமாக கண்காணிப்பில் உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் 6 கண்காணிப்பு திரைகள், பாதுகாப்பு அறையை கண்காணிக்க 7 கண்காணிப்பு திரைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் வருவாய் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். காவல்துறை மூலம் 24 மணி நேரமும் 172 மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 11 லட்சத்து 36 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளன 11,373 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. காலையில் முதலில் தபால் வாக்குகள் காலை 8:00 மணிக்கு எண்ணப்படும். 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு மையம், தபால் வாக்குகள் ஒரு மையம் என மொத்தம் 7 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு காலை 8.30 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆட்சியர்கள், முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும்.

சங்ககிரி தொகுதிக்கு 23 சுற்றுகள் எண்ணுவதற்கு வாய்ப்பு உள்ளது. மற்ற 5 தொகுதிகள் 19 சுற்றுலா எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 14 மேஜைகள் போடப்பட்டு, வாக்கு எண்ணும் உதவியாளர், மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 40 வேட்பாளர்களுக்கான 1200 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எந்தவிதமான மின்னணு பொருட்களும் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதை ஏற்கனவே அவர்களுக்கு தெரிவித்துள்ளோம். கால்குலேட்டர், மொபைல் போன், ஆகியவற்றை நுழைவுவாயில் முன் உள்ள அதற்கான நியமிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

முகவர்கள் அடையாள அட்டை அவசியம் கொண்டு வர வேண்டும். முகவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து சேர வேண்டும். உள்ளே வந்த பிறகு அவர்கள் வெளியே அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர், உணவு, கழிப்பிடம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் ஒருவர் சண்டிகர் மாநிலத்திலிருந்து மற்றொருவர் ஜார்கண்டிலிருந்து வருகை தர உள்ளனர். அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து வாக்கு என்னும் மையத்தை அவர்கள் பார்வையிடுவார்கள். பத்திரிகையாளர்கள் 89 பேருக்கு, வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் ஊடக அறை வரை மொபைல் ஃபோன்களை கொண்டு வரலாம். வாக்கு என்னும் இடத்தில் ஹேண்ட் ஹெல்டு கேமரா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. அனைத்து துறைகளின் ஒத்துழைப்போடு வாக்கு எண்ணிக்கை தயார் நிலையில் உள்ளது.வாக்கு என்னும் 7 அறைகளிலும் மொத்தம் 347 பேர் நேரடியாக வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவார்கள்.

சுற்றுவாரியாக முடிவுகள் வழங்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான உமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறும்போது, வாக்கு எண்ணும் மையம் மற்றும் மாவட்ட பிறப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புகள் என இரண்டு கட்டங்களாக பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 1424 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வாக்கு எண்ணும் மையத்தில் 600 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மையத்தில் வாக்கு எண்ணும் அறைகளில் தலா ஒருவர் சி ஐ எஸ் எப், ஸ்ட்ராங் ரூமில் சிறப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். முகப்பிலிருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு செல்ல பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு காவல் துறை பாதுகாப்பு ஈடுபடுத்தப்படுவர்.

அப்பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. வாக்கு எண்ணும் பகுதியில் 100 மீட்டர் முன்பதாகவே வாகனங்களை நிறுத்திவிட்டு வரவேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மின்னணு சாதனங்கள் கொண்டுவருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விதிமுறைகளை மீறுவோர் கண்டிப்பாக வெளியே அனுப்பப்படுவார்கள்.

பாதுகாப்பு குறைபாடுகள் வராத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 4 காவல் உட்கோட்ட பகுதிகளிலும் 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கூடுதல் காவல் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் நாளன்று (ஜூன் -4) மதுபானம் விற்கக் கூடாது.

இப்போது முதலே சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுகிறதா என்று கண்காணிக்கப்படுகிறது என்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), ச.பிரபாகரன் (சேந்தமங்கலம்), த.முத்துராமலிங்கம் (இராசிபுரம்), ச.பாலகிருஷ்ணன் (பரமத்தி), லோகநாயகி (சங்ககிரி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ந.சிவக்குமார், வட்டாட்சியர் (தேர்தல்) திருமுருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story