தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ஆட்சியர் ஆய்வு

தேர்தல் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஸ்ரீ விஜயசாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது . மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (13.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story