மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
சிவகாசி அருகே மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்...
சிவகாசி அருகே மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மேட்டு காட்டில் ,3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில்மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து,மாவட்டஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

சிவகாசி விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 16.03.2022 அன்று முதற்கட்டமாகவும், 06.04.2023 அன்று இரண்டாம் கட்டமாகவும்,அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்ற போது நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரையிலான பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அதோடு,நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள்,சூடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள்,தக்களி,சங்க கால வளையல்கள்,மோதிரங்கள், சில்லு வட்டுகள்,உருக்கு கழிவுகள்,சங்கு,வளையல்கள் தங்க அணிகலன்கள்,விலை மதிப்புள்ள கல் மணிகள் என சுமார் 7,914 பழங்கால பொருள்கள் எடுக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து,3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விரைவில் தொடங்கப்பட நிலையில்,தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து,மாவட்டஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்நிகழ்ச்சியில் தொல்லியல் துறை,வட்டாட்சியர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story