பென்னாகரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்ட முகாம் நடைபெற்று வருகின்றது இதனை அடுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் திடீரென கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றார் இதனால் இன்று பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார் அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் பின்பு நோயாளிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் போதுமான அளவு மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றதா? அடிப்படைத் தேவைகள் ஏதேனும் உள்ளதா மற்றும் மதிய உணவு சரியான நேரத்திற்கும் தரமானதாக கிடைக்கப் பெறுகின்றதா என கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story