தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து பூதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து பூதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் இன்று(10.06.2024) திறக்கப்பட்டுள்ளதையடுத்து திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் எத்தனை மாணவ, மாணவிகள் உள்ளனர், புதிய மாணவர்கள் சேர்க்கை எத்தனை என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டதை ஆய்வு செய்து, காலை உணவு குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா, சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் துாசு இல்லாமல் சுத்தமாக உள்ளதா, கழிவறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story