அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் மருத்துவமனை வளாகத்தில் தொடர் மழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டதுடன், மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைத்து மழைநீர் தேங்காத வண்ணம் கண்காணித்திடவும் அறிவுறுத்தினார்.
பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடங்களை பார்வையிட்டதுடன், மருத்துவ பயன்பாட்டிற்குள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடு போன்றவற்றை பார்வையிட்டத்துடன், பொதுப்பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண்காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மலர்வண்ணன், சிவகுமார், மனோஜ் குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், இராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.