காட்பாடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காட்பாடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேனூர், வஞ்சூர் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீர் நிலைகள் புதுப்பித்தல், குக்கிராமங்களில் தெருக்கள்,வீதிகள் அமைத்தல்,தெருவிளக்குகள் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்படுத்தல், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல், பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுப் பயன்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் ஆய்வுமேற்கொண்டு வருகிறார்.

அதன்அடிப்படையில் காட்பாடிவட்டம் சேனூர் ஊராட்சியில் ரூபாய் 22.65 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வஞ்சூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை ரூபாய் 32.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருவதையும், ரூ 14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன். வருவாய் கோட்டாட்சியர் கவிதா மற்றும் காட்பாடி வட்டாட்சியர் ஜெகன், உட்பட பலர் இருந்தனர்

Tags

Next Story