கிள்ளியூர் பேரிடர் நிவரண முகாம்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

X
ஆய்வின் போது அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிள்ளியூர் தொகுதி மங்காடு பகுதிக்குட்பட்ட 3 குடும்பங்களை சேர்ந்த 11 நபர்கள் ஏழுதேசம் அரசு மேல்நிலைப்பள்ளிலும், ஏழுதேசம் “ஆ“ கிராமத்திற்குட்பட்ட 3 குடும்பங்களை சேர்ந்த 5 நபர்கள் பேரிடர் பாதுகாப்பு மையத்திலும், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று இரவு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நடைபெற்ற ஆய்வில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ரஜத் பீட்டன் கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story
