புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு  !

புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு  !

புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாகத்தில், தஞ்சாவூர் புத்தகத் திருவிழா வரும் ஜூலை.19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. 7 ஆவது தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரண்மனை வளாக மைதானத்தில் புத்தகத் திருவிழாவிற்கான அரங்குகள் அமைத்தல், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்தும், அரண்மனை வளாகம் கலைக் கூடத்தில் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பார்வையிட்டார். பின்னர், சத்திரம் நிர்வாகத்திலுள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியிலும், திருவையாறு அரசர் கலைக் கல்லூரியிலும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்கள்.

பின்னர் தஞ்சாவூர் மாநகராட்சி மைய நூலகத்தில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் பணியில் உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், வட்டாட்சியர்கள் அருள்ராஜ் (தஞ்சாவூர்), தர்மராஜ் (திருவையாறு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story