ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் CCTV பழுது: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர்
ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான பவானி அருகே உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவு எந்திரங்கள். மாவட்ட ஆட்சியர் வேட்பாளர்கள் ,
முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் 220 CCTV கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வகை்கப்பட்ட சீல் வைக்கப்பட்ட அறையின் கதவை நோக்கி இருந்த சிசிடிவி கேமரா நேற்று இரவு 11 மணி முதல் 3 மணி வரை பழுது ஏற்பட்டது.
இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு சிசிடிவி கேமராவை மாற்றி வைத்தனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கை மையத்தில் CCTV கேமரா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹருடன் இணைந்து ஆய்வு செய்தார்